Wednesday, 6 February 2013

எப்படி உங்கள் மின் அஞ்சல் முகவரி spam மின் அஞ்சல் அனுப்புவர்களின் கையில் கிடைக்கிறது?

நீங்கள் மின் அஞ்சல்களைப் பார்க்க இணையம் செல்லும் போது, அவற்றில் பல வேண்டாத மின் அஞ்சல்கள் வந்து குவிந்து கிடக்கும்.அவை spam அல்லது junk என்ற கோப்புக்கு அனுப்பபடும். ஆனாலும் அவை எப்படி இவர்களுக்கு கிடைக்கிறது? Chat Room,சமூகத்தளங்கள்,தேடுதளங்கள் இப்படிக் கிடைத்தாலும் கூட harvesting,robo போன்ற சில மென்பொருட்களை இணையத்தில் இணைத்து, தேடுதளங்கள்,news groups,chat போன்றவற்றில் இருந்து சுலபமாக எடுத்துக் கொள்கிறார்கள்.இந்த spam mails அனேகமாக இரவு நேரங்களில் அனுப்பப்படுகிறது.
இவற்றில் இருந்து நம்மை காத்துக் கொள்ள @ என்பதை, நாம் ஒருவருக்கு மின் அஞ்சல்களை கொடுக்கும் போது
தவிர்த்துக் கொள்ள வேண்டும். at ,– , / இப்படி ஏதாவது முறையில் @ என்பதை தவிர்த்து முகவரியை கொடுக்க வேண்டும்.
Spam mails களை நீக்க எக்காரணம் கொண்டும் unsubscribe என்பதை பயன்படுத்தக் கூடாது. அப்படி பயன்படுத்தினால் நம்மை நாமே காட்டிக் கொடுத்தவர்களாவோம்.
சில மென்பொருள் தரவிறக்கத்தின் போது, உங்கள் மின் அஞ்சல்களைக் கேட்டால், ஒரு நாள் முகவரி,முகமூடி முகவரி போன்றவற்றை கொடுத்து தப்பித்துக் கொள்ளலாம். heuristic filters , Bayesian filters போன்ற spam filter களையும் வேண்டுமானால் பாவிக்கலாம்.
பொதுவாக மின் அஞ்சல்கள் மூலம் வைரஸ் மால்வெயர்கள் பரப்பப்படுவதால் இவற்றை நாம் கவனிக்க வேண்டி உள்ளது.

நன்றி.
sakthyv

Sunday, 3 February 2013

WIFI யின் வேகத்தை எப்படி அதிகரிக்கலாம்?


 WIFI யின் வேகத்தை எப்படி அதிகரிக்கலாம்?

பலர் இன்று WIFI மூலம் லாப்டொப்பில் இருந்து இணையத் தொடர்பை ஏற்படுத்துகிறார்கள். ISP மூலமும்,றௌடெர் மூலமும் கிடைக்கும் தொடர்புகளின் வேகத்தை அதிகரிக்க சிறிது தொழில் நுட்ப அறிவு தேவைப்படுகிறது.அதை செய்ய முயற்சித்து உள்ளதையும் கெடுத்துக் கொண்டவர்கள் இருக்கவே செய்கிறார்கள்.
அதை விடுத்து,வேறு சில முறைகளை இங்கு தருகிறேன்.

நாம் பள்ளியில் Physics,இயற்பியல் அல்லது பௌதீகவியல், படித்திருப்போம்.அப்போது kirchoff’s law என்பதையும் படித்திருக்க முடியும்.இதை நான் விளக்கப் போவதில்லை.இது மிகப் பெரிய கணக்கு.அதன் அடிப்படையில் ஒரு சிறிய விசயம்.
WIFI யின் antenna வை சரி செய்வது,WIFI ன் Firmware ஐ update செய்வது,WIFI Monitor ல் நாம் பார்ப்பதன் மூலம் நல்ல signal எந்த பிரிகுவென்சியில் கிடைக்கிறது என்பதை தெரிந்து கொண்டு அதற்கு மாற்றுவது போன்றவற்றை செய்யலாம்.உங்கள் WIFI Router 802.11b ல் அல்லது 802.11g ல் settup செய்யப்பட்டிருக்கலாம்.அல்லது mixed ஆக செட்டப் செய்யப்பட்டிருக்கலாம். ஏதாவது ஒன்றாக இருந்தால் நன்றாக இருக்கும்.
இதைவிட WIFI க்கு ஒரு wireless repeater அல்லது booster ஐ இணைத்துக் கொள்ளலாம்.இது மிக சுலபம்.எந்த இணைப்புக்களும் இல்லாதவை.வேண்டுமானால் ஒரு whisk ஐ WIFI அன்டெனாவில் சொருகிப் பார்த்தால் வேகம் இரண்டு மடங்காக அதிகரிப்பதைக் காண முடியும்.இதைப் போன்றே இந்த wireless repeater ம் வேலை செய்கிறது.

அது என்ன collission


அது என்ன collission 

collision என்பது firefox ற்கான addon .நீங்கள் firefox browser இல் Tools -addon ற்கு சென்று search ல் collision எனக் கொடுத்தால் அதை இன்ஸ்டால் செய்யலாம்.
இதன் சிறிய ஐகன் browser இன் வலது கீழ் மூலையில் வந்து இருக்கும்.அதைக் கிளிக் செய்தால்,நீங்கள் சென்ற இணையப் பக்கத்துடன் சேர்ந்து யார் யார் வந்து சேர்ந்தார்கள் என்பதைக் கிராபிக் மூலம் காட்டும்.உதாரணமாக askintamil பக்கம் சென்றால் அந்தக் பக்கத்துடன் சேர்ந்து யார் உங்கள் கணினிக்குள் வந்தார்கள் என்பதைக் காட்டும்.
விளம்பரம்,கூகுளே போன்ற தேடுபொறி…….இப்படி.
ஆனால் இவை எல்லாம் ஆபத்தானவை என்று பொருள் அல்ல. சில வேண்டாத cookies ஆகவும் இருக்கலாம். அப்படி இருந்தால்,browser ற்கு சென்று அவற்றை remove cookies நீக்கி விடலாம்.
வலது பக்கத்தில் வந்த பக்கங்களின் விபரங்களையும் காட்டும்



இணையத்தில் பயணிக்கும் போது யார் உங்களை நோட்டம் விடுகிறார்கள்?


இணையத்தில் பயணிக்கும் போது யார் உங்களை நோட்டம் விடுகிறார்கள்?

நாம் இணையப் பக்கங்களில் பயணிக்கும் போது யார் எப்படி தகவல்களை அறிகிறார்கள்?

ஒன்று இணையப் பக்கத்தில் Geolocation என்ற மென்பொருள் இணைப்பதன் மூலம்.இரண்டாவது ISP மூலம்.இந்த தகவல்களை சில நாடுகளில் நேரடியாக பொலீசாரும்(குற்றம் சுமத்தும் போது),வேறு சில நாடுகளில் சில ஜேம்ஸ் பொண்ட் தளங்களும், spycomputer,search dog மூலமும் கண்டறிகிறார்கள்.ஆனாலும் தொழில் நுட்பம் அதையும் உடைத்து விட்டு உள்ளே சென்று விடுகிறது. வடிவேல் எல்லோரும் அகப்பட முடியுமா என்ன?
அப்பாவியான உங்களை யாரோ பலோ பண்ணுவது போல் இருக்கிறதா?Firefox Browser வைத்திருப்பவர்கள் Collision என்ற addon ஐ நிறுவதன் மூலம் நீங்கள் ஒரு இணையப் பக்கத்திற்கு செல்லும் போது மூன்றாவது நபர்கள் யார் உங்களைக் கண்காணிக்கிறார்கள் என்பதை ஒரு கிராபிக் மூலம் காட்டும். இன்ஸ்டால் செய்ததும் பிரவுசரின் வலது கீழ் மூலையில் ஒரு சிறிய ஐகன் வரும் அதைக் கிளிக் செய்தால் இந்த விபரம் காட்டும்.அதில் சைத்தான் யாராவது இருக்கிறார்களா என்பதைக் கண்டறிய முடியும்.
ஐயையோ இவ்வளவு பேரா நம்மைக் கண்காணிக்கிறார்கள் என்று ஆச்சரியப்படுவீர்கள்.

இணையத்தில் நடக்கும் சில தொழில்நுட்ப தில்லுமுல்லுகள் என்ன?


இணையத்தில் நடக்கும் சில தொழில்நுட்ப தில்லுமுல்லுகள் என்ன?

இணையத்தில் பல தொழில்நுட்ப தில்லுமுல்லுகள்,தில்லாலங்கடிகள் நடந்து வருகின்றன.அவற்றுள் சில இவை.

1.Hacking இதற்கு பல விளக்கம் இருப்பினும் கணினியில் ஊடுருவல்
என்று பொருள் கொள்ளலாம்.ஊடுருவல் நல்ல,கெட்ட வழிகளுக்காக
(positive and negative) என இரண்டு முறையில் செய்யப்படுகிறது.
Spooling சுருட்டுதல் என சொல்லலாம். ஒரு இடத்தில் இருந்து
இன்னொரு இடத்திற்கு ப்ரொசெஸ் (Process) செய்ய எடுத்து செல்வது.
Spoofing என்பது ஒன்றை இன்னொன்றாக மாற்றி விடுவது.மின்
அஞ்சல், ID,IP போன்றவற்றை மாற்றி விடுவது.

2.Phishing என்பது ஒரு வகை identity theft. credit card,பாஸ்வேர்ட்,பயனாளர்
பெயர் போன்றவற்றை திருடும் ஒரு வகை திருட்டு.சில சமயம் மின் அஞ்சல் மூலமும் திருடப்படும்.

3.Financial theft என்று சொல்லப்படும் Vishing என்பது தொலைபேசி, VOIP
போன்றவற்றின் மூலம் credit card இலக்கம் போன்ற விபரங்களை
திருடும் ஒரு வகை கிரிமினல் செயற்பாடு.

4.Morphing என்பது உருமாற்றம் என்று பொருள் படும்.ஒரு வகை image effect ல் இருந்து இன்னொன்றிற்கு மாற்றுவது.