Wednesday 6 February 2013

systattin ip அட்ரஸ் எப்படி தெரிந்து கொள்வது . சற்று விளக்கமாக சொல்லவும்

உங்களுக்கு ஒரு பெயர் இருக்க வேண்டும்.அப்போது தான் உங்களை அழைக்க முடியும்.கணினிக்கும் ஒரு பெயர் வேண்டும்.ஆனால் எழுத்திலே ஒரு பெயரை கணினிக்கு கொடுத்தால் அதற்கு விளங்காது. கணினிக்கு விளங்கக் கூடிய ஒரு வழி இலக்க வழி,கணினி மொழி தான். அதனால் தான் கணினிக்கு இலக்க வடிவில் பெயர் கொடுத்துள்ளார்கள்.அது IP.
IP என்பது 0 – 255 ற்கு உட்பட்ட நாலு எண் கூட்டைக் கொண்டது.(66.72.98.236 or 216.239.115.148 )
static IP என்பது உங்கள் இன்டெர்னெட் தொடர்பு தருபவர்களால், BSNL, … தரப்படுவது,அனேகமாக ஒரே எண்ணாக இருக்கும். Dynamic IP என்பது நீங்கள் ஒவ்வொருமுறையும் இன்டெர்னெட் போகும் போதும் மாறக் கூடியது.ஆனாலும் உங்கள் இணைப்பு broadband ஆக இருந்தால்,அதாவது router மூலம் இணைக்கப்பட்டால், இந்த dynamic IP எப்போதும் ஒரே மாதிரியாக இருக்கும்.
நீங்கள் உங்கள் கணினியில் start. – all programs- accessories – command prompt ல் சென்று ipconfig/all என எழுதினால் உங்கள் ip முழு விபரமும் காட்டும். தற்செயலாக தற்போதய ip4 address போதுமானதாக இல்லையேல் உங்கள் கணினி புதிய ip6 ல் வேலை செய்யக் கூடியதாக அமைத்துள்ளார்கள். உங்கள் கணினியின் ip6 address ஐயும், அங்கே காண முடியும்.
ஒரு பக்கத்தின் IP ஐ கண்டறிய start. – all programs- accessories – command prompt ல் சென்று ping google.com என கொடுத்து enter செய்தால் google.com ன் IP ஐ காட்டும்.

நன்றி.
sakthyv

No comments:

Post a Comment