Sunday 3 February 2013

இணையத்தில் பயணிக்கும் போது யார் உங்களை நோட்டம் விடுகிறார்கள்?


இணையத்தில் பயணிக்கும் போது யார் உங்களை நோட்டம் விடுகிறார்கள்?

நாம் இணையப் பக்கங்களில் பயணிக்கும் போது யார் எப்படி தகவல்களை அறிகிறார்கள்?

ஒன்று இணையப் பக்கத்தில் Geolocation என்ற மென்பொருள் இணைப்பதன் மூலம்.இரண்டாவது ISP மூலம்.இந்த தகவல்களை சில நாடுகளில் நேரடியாக பொலீசாரும்(குற்றம் சுமத்தும் போது),வேறு சில நாடுகளில் சில ஜேம்ஸ் பொண்ட் தளங்களும், spycomputer,search dog மூலமும் கண்டறிகிறார்கள்.ஆனாலும் தொழில் நுட்பம் அதையும் உடைத்து விட்டு உள்ளே சென்று விடுகிறது. வடிவேல் எல்லோரும் அகப்பட முடியுமா என்ன?
அப்பாவியான உங்களை யாரோ பலோ பண்ணுவது போல் இருக்கிறதா?Firefox Browser வைத்திருப்பவர்கள் Collision என்ற addon ஐ நிறுவதன் மூலம் நீங்கள் ஒரு இணையப் பக்கத்திற்கு செல்லும் போது மூன்றாவது நபர்கள் யார் உங்களைக் கண்காணிக்கிறார்கள் என்பதை ஒரு கிராபிக் மூலம் காட்டும். இன்ஸ்டால் செய்ததும் பிரவுசரின் வலது கீழ் மூலையில் ஒரு சிறிய ஐகன் வரும் அதைக் கிளிக் செய்தால் இந்த விபரம் காட்டும்.அதில் சைத்தான் யாராவது இருக்கிறார்களா என்பதைக் கண்டறிய முடியும்.
ஐயையோ இவ்வளவு பேரா நம்மைக் கண்காணிக்கிறார்கள் என்று ஆச்சரியப்படுவீர்கள்.

No comments:

Post a Comment