Wednesday 6 February 2013

எப்படி உங்கள் மின் அஞ்சல் முகவரி spam மின் அஞ்சல் அனுப்புவர்களின் கையில் கிடைக்கிறது?

நீங்கள் மின் அஞ்சல்களைப் பார்க்க இணையம் செல்லும் போது, அவற்றில் பல வேண்டாத மின் அஞ்சல்கள் வந்து குவிந்து கிடக்கும்.அவை spam அல்லது junk என்ற கோப்புக்கு அனுப்பபடும். ஆனாலும் அவை எப்படி இவர்களுக்கு கிடைக்கிறது? Chat Room,சமூகத்தளங்கள்,தேடுதளங்கள் இப்படிக் கிடைத்தாலும் கூட harvesting,robo போன்ற சில மென்பொருட்களை இணையத்தில் இணைத்து, தேடுதளங்கள்,news groups,chat போன்றவற்றில் இருந்து சுலபமாக எடுத்துக் கொள்கிறார்கள்.இந்த spam mails அனேகமாக இரவு நேரங்களில் அனுப்பப்படுகிறது.
இவற்றில் இருந்து நம்மை காத்துக் கொள்ள @ என்பதை, நாம் ஒருவருக்கு மின் அஞ்சல்களை கொடுக்கும் போது
தவிர்த்துக் கொள்ள வேண்டும். at ,– , / இப்படி ஏதாவது முறையில் @ என்பதை தவிர்த்து முகவரியை கொடுக்க வேண்டும்.
Spam mails களை நீக்க எக்காரணம் கொண்டும் unsubscribe என்பதை பயன்படுத்தக் கூடாது. அப்படி பயன்படுத்தினால் நம்மை நாமே காட்டிக் கொடுத்தவர்களாவோம்.
சில மென்பொருள் தரவிறக்கத்தின் போது, உங்கள் மின் அஞ்சல்களைக் கேட்டால், ஒரு நாள் முகவரி,முகமூடி முகவரி போன்றவற்றை கொடுத்து தப்பித்துக் கொள்ளலாம். heuristic filters , Bayesian filters போன்ற spam filter களையும் வேண்டுமானால் பாவிக்கலாம்.
பொதுவாக மின் அஞ்சல்கள் மூலம் வைரஸ் மால்வெயர்கள் பரப்பப்படுவதால் இவற்றை நாம் கவனிக்க வேண்டி உள்ளது.

நன்றி.
sakthyv

No comments:

Post a Comment