Wednesday 13 February 2013

Virtual Memory ஐ அதிகரிப்பது எப்படி?


Virtual Memory ஐ அதிகரிப்பது எப்படி?

 கணினியில் உள்ள செயலிகள் மற்றும் அனைத்தும் முறையாக இயங்க RAM(Random Access Memory )தற்காலிக நினைவகம் தேவைப்படுகிறது.இந்த RAM அளவு காணாமல் போகும் போது விண்டோஸ் வந்தட்டில் உள்ள free space ல் இருந்து கொடுத்து உதவும். கணினி செயல்கள் வேகம் குறையும் போது RAM ல் உள்ள தரவுகளை வந்தட்டில் உருவாக்கப்பட்ட சேமிப்பில் தற்காலிகமாக சேமித்து உதவுகிறது.இது paging files எனப்படுகிறது.
வந்தட்டில் உருவாக்கப்படும் சேமிப்பகத்தை Virtual Memory (Ram ) என்று சொல்லப்படுகிறது.இதை விண்டோஸ் தானியங்கியாக அமைத்துக் கொண்டாலும் கூட, நாம் நமக்கு வேண்டிய வகையில்,நமது வந்தட்டில் காலியாக இருக்கும் இடத்தை பொறுத்து மாற்றி அமைக்க முடியும்.
Start – Control Panel – System and Maintenance -System – Advanced system settings -Advanced tab- Performance -Settings -
Advanced – Virtual memory – Change- Automatically manage paging file size for all drives -Maximum size (நமக்கு வேண்டியபடி)- OK
இந்த அளவு RAM அளவின் 1.5 மடங்கு ஆகும்(குறைந்த அளவு)கணினி வந்தட்டின் காலி இடத்தைப் பொறுத்து நான்கு மடங்கு வரை அளவை(maximum) அதிகரிக்கலாம்.
உதாரணமாக..RAM= 512 MB ; Virtual Memory 512 x 1.5 = 768 MB ல் இருந்து 512 x 4 = 2048 வரை.(Hard Disk ல் போதுமான free space இருந்தால்)
இந்த RAM Memory USB மூலமும் அதிகரிக்கலாம்.

No comments:

Post a Comment