Tuesday 12 February 2013

STROKE – பற்றி சிறிது தெரிந்து கொள்ளலாம்


STROKE – பற்றி சிறிது தெரிந்து கொள்ளலாம். குருதி மூளைக்கு செல்வது தடைப்படும் போது ஏற்படும் இந்த stroke, இரண்டு வகைப்படும். பொதுவாக வரும் ischemic stroke என்பது மூளை இரத்த நாளத்தில், இரத்தம் உறைதல்,clot, மூளைக்கு இரத்தம் செல்லாததாலும்,மற்றது hemorrhagic stroke, இரத்த நாளம் வெடித்து இரத்தம் வெளியேறுவதாலும் ஏற்படுவது.இதை விட, ஒரு சிறிய நேரம் இரத்தம் தடைப்பட்டு சரியாவது.இதை குறுகிய ,mini stroke ,என்பர். மூளைக்கு செல்லும் இரத்தம் தடைப்படுவதால் ஆக்சிஜின் இல்லாமல் மூளை குருதி கலன்கள்(செல்கள்) மிக விரைவில் அழிந்து விடும்.
நடைத் தளர்வு,மயக்கம்,திடீர் சிந்தனைத் தடை.பேச்சுத்தடை,ஒரு பக்கம் கை கால் செயலிளப்பது,தடுமாற்றம்,திடீர் தலைவலி போன்றவை ஏற்படலாம்.உடன் மருத்துவரிடம் செல்வதால் இரத்தக்கட்டியை அகற்றி இரத்த ஓட்டத்தை ஏற்படுத்தி விடலாம். மூன்று மணி நேரத்திற்குள் மருத்துவரை அணுகாத பட்சத்தில் குணப்படுத்துவதில் சிரமம் ஏற்படலாம்.
பொதுவாக 55 வயதிற்கு மேற்பட்டவர்கள்,பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் ஏற்பட்டாலும்,இறப்பு விகிதம் ஆண்களை விட பெண்களே அதிகம்,கவலையீனமாக இருக்கும் டயபிடிஸ் நோய் உள்ளவர்கள்,இரத்த அழுத்தம்,புகை,மது பாவனையாளர்கள்,கொலஸ்டெரரோல் அதிகம்,உடற்பருமன் உடையவர்கள்,மன அழுத்தம்,கற்பத்தடை மாத்திரை பாவிப்பவர்கள், போன்றவர்களுக்கு வர வாயிப்புண்டு.
ஆரம்ப முதலுதவி சிகிச்சையாக ……………நாம் சில முறைகளை முயற்சிக்கலாம்.
S………….Smile……..அதாவது மெல்ல சிரிக்கும்படி சொல்லி அவர் நிலையை அறியலாம்.
T………….Talk……..எப்படி இருக்கிறது,பெயர் என்ன போன்ற சிறிய கேள்விகளைக் கேட்டு அவர் நிலையை அறியலாம்.
R…………..Raise….இரண்டு கைகளையும் உயர்த்தும்படி கேட்கலாம்.
மேற்சொன்ன படி செய்வதால் அவர் மூளையில் குருதி ஓட்டம்,உறைவு பற்றி அறிந்து கொள்ள முடியும்.
இவைகளில் அவர் சிரமப் பட்டால் உடனே மருத்துவரிடம் தாமதமின்றி கொண்டு செல்ல வேண்டும்.
இதை விட அவர் நாக்கும் நேராக இருக்காது வளைந்து ஒட்டியபடி இருந்தாலும் அறிகுறி என சொல்லலாம்.
தெருவில் அல்லது வேறு எங்கோ உயிருக்குப் போராடும் ஒருவரை காப்பாற்றுங்கள்.பொலீசார் வரும்வரை காத்திருந்து உயிரின் அழிவிற்கு நீங்களே காரணமாகி விடாதீர்கள். காப்பாற்றாது விடுவதும்,சிகிச்சை செய்யாது விடுவதும் சட்டப்படி குற்றமாகும். சினிமா படப்பிடிப்பைப் போல் வேடிக்கை பார்ப்பதை இனியாவது மாற்றிக் கொள்ளுங்கள்.



No comments:

Post a Comment