Sunday 3 February 2013

WIFI யின் வேகத்தை எப்படி அதிகரிக்கலாம்?


 WIFI யின் வேகத்தை எப்படி அதிகரிக்கலாம்?

பலர் இன்று WIFI மூலம் லாப்டொப்பில் இருந்து இணையத் தொடர்பை ஏற்படுத்துகிறார்கள். ISP மூலமும்,றௌடெர் மூலமும் கிடைக்கும் தொடர்புகளின் வேகத்தை அதிகரிக்க சிறிது தொழில் நுட்ப அறிவு தேவைப்படுகிறது.அதை செய்ய முயற்சித்து உள்ளதையும் கெடுத்துக் கொண்டவர்கள் இருக்கவே செய்கிறார்கள்.
அதை விடுத்து,வேறு சில முறைகளை இங்கு தருகிறேன்.

நாம் பள்ளியில் Physics,இயற்பியல் அல்லது பௌதீகவியல், படித்திருப்போம்.அப்போது kirchoff’s law என்பதையும் படித்திருக்க முடியும்.இதை நான் விளக்கப் போவதில்லை.இது மிகப் பெரிய கணக்கு.அதன் அடிப்படையில் ஒரு சிறிய விசயம்.
WIFI யின் antenna வை சரி செய்வது,WIFI ன் Firmware update செய்வது,WIFI Monitor ல் நாம் பார்ப்பதன் மூலம் நல்ல signal எந்த பிரிகுவென்சியில் கிடைக்கிறது என்பதை தெரிந்து கொண்டு அதற்கு மாற்றுவது போன்றவற்றை செய்யலாம்.உங்கள் WIFI Router 802.11b ல் அல்லது 802.11g ல் settup செய்யப்பட்டிருக்கலாம்.அல்லது mixed ஆக செட்டப் செய்யப்பட்டிருக்கலாம். ஏதாவது ஒன்றாக இருந்தால் நன்றாக இருக்கும்.
இதைவிட WIFI க்கு ஒரு wireless repeater அல்லது booster ஐ இணைத்துக் கொள்ளலாம்.இது மிக சுலபம்.எந்த இணைப்புக்களும் இல்லாதவை.வேண்டுமானால் ஒரு whisk WIFI அன்டெனாவில் சொருகிப் பார்த்தால் வேகம் இரண்டு மடங்காக அதிகரிப்பதைக் காண முடியும்.இதைப் போன்றே இந்த wireless repeater ம் வேலை செய்கிறது.

No comments:

Post a Comment