Friday 22 February 2013

ஒரு இணையப் பக்கம் எப்படி வேலை செய்கிறது?


 http://www…………………………….. .com. உங்கள் உலாவியில்(Browser) (Google Chrome,Internet explorer,Firefox,Opera ,Maxthon இப்படி ஏதாவது) தட்டச்சு செய்ததும், என்ன ஆச்சரியம் அந்தப் பக்கம் உங்கள் கண் முன்னே வருகிறது. படிக்கிறீர்கள்.
உங்கள் நண்பர் சரியாக கொடுக்காது போனால் அல்லது நீங்கள் தவறாக எழுதி வைத்துக் கொண்டாலும் கூட,(error 404 என்ற செய்தி வரும்) ஒரு தேடு பொறியின் மூலம் (google search,yahoo searh,bing இப்படி) தேடி சிறிது தாமதத்தின் பின் அந்தப் பக்கத்திற்கு செல்ல முடியும்.சரியான முகவரியை கொடுத்தால் ஆட்டோக்காரர் உடனே கொண்டு போய் விடுவது போல்.(நல்ல ஆட்டோக்காரர் ஆக இருந்தால்?) சென்றடையும். இந்த முகவரியை,(URL – uniform resource locator), மூன்று பிரிவுகளாக,(Http (protocol); server name ; file name (……..htm.,….) பிரிக்கிறார்கள்.(HTTPS என்பது மிக பாதுகாப்பான பக்கமாக கருதப்படுகிறது.(வங்கி போன்றவற்றை சொல்லலாம்) எடுத்துக்காட்டாக,http://askintamil.com/?p=188 இப்படி இருக்கலாம்.இதில் p=188 என்பது file ன் பெயர்.
நீங்கள் கொடுத்த முகவரி IP இலக்கமாக மாற்றப்பட்டு வலைவாசல் வழியே(PORT) அனுப்பப்படும்.(port என்பதை ip இலக்கத்துடன் நீங்கள் காணலாம்.)
நீங்கள் உலாவியில் கொடுத்த முகவரி(server – வழங்கி) இணையம் மூலம் அனுப்பப்பட்டு,உங்கள் விருப்பத்தை(get request) அங்கே தெரிவித்ததும், அந்த server ,HTML TEXT(HyperText Markup Language) ஆக உங்கள் கணினியில் உள்ள உலாவிக்கு அனுப்பும்.இப்போது நீங்கள் விரும்பிய பக்கம் உங்கள் கணினித் திரையில் தோன்றும்.அந்த server நீங்கள் கேட்ட விபரங்களை அனுப்பும் போது,அதன் தலைப்பாக ஒரு cookie ஐயும் சேர்த்து அனுப்பும்.அந்த Data பக்கெட் வந்ததும்,உலாவி அதை பின்னர் திருப்பி வழங்குனருக்கு அனுப்பும்.இந்த cookie உங்கள் உலாவியில் சேமிக்கப்படும்..இவற்றில் சில cookie கள் worm,spyware,spamming,போன்ற கெடுதல்களைத் தரலாம் என்பதால்,நீங்கள் அனைத்தையும் அல்லது,தேவையற்றவற்றை அழித்து விடலாம்.
இணையத்தில் பயணிக்கும் Data பக்கெட்டின் வேகம் வினாடிக்கு 1.5 மில்லியனுக்கு மேற்பட்ட (1.5 million bits per second )வேகத்தில் அனுப்புவதால் தான்,உலகில் எங்கிருந்தாலும் விரைவாக நமக்கு கிடைக்கிறது.
இங்கே நம்மை நுகர்பவர்(client) எனவும், நாம் கேட்பதை தருபவரை வழங்குபவர்(server) எனவும் குறிப்பிடுகிறார்கள்.
இது போலவே ஒரு வழங்கியின் (server) IP இலக்கத்தை நாம் நினைவு படுத்தி வைத்திருப்பது சிரமம் என்பதால், வழங்குபவருக்கு ஒரு பெயரைக் கொடுக்கிறார்கள்.இதை Domain name என்கிறார்கள்.அதாவது askintamil.com இன் IP இலக்கம் 95.211.121.129 ஆக இருந்தால் உங்களால் நினைவில் வைத்திருக்க முடியுமா? அதனால் ஒரு domain பெயராக askintamil என பெயரிட்டு இருக்கிறார்கள்.அது மட்டுமல்லாது,IP இலக்கம் மாறக் கூடியது.பெயர் எப்போதும் ஒரே பெயராக இருக்கும்.இங்கேயும் மூன்றாக பிரிக்கப்படுகிறது.Host-www.domain name . Com (இங்கே com,net,org இப்படி பல வரலாம்). இந்த டொமைன் ஐ domain name server (DNS) என்கிறார்கள்.
மேலே சொன்ன port ,ஒரு சேர்வரில் ஒரு வெப் சேர்வரும்,ஒரு FTP server உம் இருக்குமானால்,அந்த சேர்வர் வெப் பக்கத்திற்கு port 80 எனவும், FTP பக்கத்திற்கு 21 எனவும் பிரித்து வைத்திருக்கலாம்.(இந்த port, smtp -25,www -80 ,telnet -23 இப்படி வேறுபடலாம்)
உலாவி,browser,என்பது ஒரு மென் பொருளாகும். இந்த மென்பொருள் நாம் தேடுவதை தேடுபொறி மூலம் தேடி,நம்மை வழ்ங்குனருடன் தொடர்பு கொள்ள வைக்கிறது.
நீங்கள் தேடிய பக்கம் எப்படி சென்றது,எவ்வளவு நேரம் எடுத்தது என்பதைக் கண்டறிய,கணினியில்,command prompt ல் சென்று tracert http://www………………. என அல்லது tracert (IP Number) கொடுத்தால் முழு விபரங்களையும் தரும்.சில சமயங்களில் சிரமம் அல்லது தாமதம் ஏற்பட்டால் Request timed out என்ற செய்தி வரும்.

No comments:

Post a Comment