Wednesday 13 February 2013

நாம் ஒரு இயங்குதளம்/OS நிறுவியவுடன் என்ன செய்ய வேண்டும்?


நாம் ஒரு இயங்குதளம்/OS நிறுவியவுடன் என்ன செய்ய வேண்டும்?

பலருக்கு OS புதிதாக அல்லது reinstall செய்த பின் பல பிரச்சனைகள் வருவது உண்டு. அந்த நிலையில்,ஒரு இயங்குதளத்தை நிறுவிய பின் முக்கியமாக என்ன செய்ய வேண்டும்,என்பதை பார்க்கலாம்.
முதலில் ஒரு கணினியின் Hard Disk 10-15 தடவைகளுக்கு மேல் ஃபொர்மட் செய்யப்படுமானால் அதன் ஆயுள் மெல்லக் குறையும் அல்லது பிரச்சனைகளைக் கொடுக்க ஆரம்பிக்கும் என்பதைக் கவனத்தில் கொண்டு,முடிந்தவரை ஃபொர்மட் செய்வதைக் குறைத்து தவறுகளைக் கண்டறிந்து திருத்திக் கொள்வதே மேலானது.
OS கணினியில் நிறுவப்பட்டுவிட்ட பின், அனைத்து device களுக்கு உரிய driver கள் நிறுவப்பட்டுள்ளதா எனவும்,தேவை ஏற்படின் update ம் செய்து கொள்ள வேண்டும்.அதன் பின் start disk அல்லது Repair/rescue disk தயாரித்துக் கொள்ள வேண்டும்.கணினியில் பிரச்சனைகள் தொடக்குவதில் பிரச்சனைகள்,போன்றவை வரும் போது இந்த repair disk கொண்டு சரி செய்து கொள்ளலாம்.
அனைத்து மென்பொருட்களை தனியாக partition ஒன்றில் சேமிக்க வேண்டும்.Firewall ஐ அக்டிவ் செய்து கொள்ள வேண்டும்.சாதாரண ஒரு கணக்கை உருவாக்கி நாம் கணினியை பாவித்தால் (admin ac ஐப் பாவிக்காது),வேண்டாத மென்பொருட்கள் நம் கணினியில் நமக்கு தெரியாமல் இன்ஸ்டால் ஆவதை தடுத்துக் கொள்ளலாம்.
உடனே antivirus இல்லாமல் இருந்தால், விண்டோஸ் defender ஐ அக்டிவ் செய்து கொள்ளலாம்.UAC ஐ சரி செய்து கொள்ளலாம்.
அனைத்து Driver களையும்,Registry ஐயும் தனியாக Backup செய்து வைத்திருப்பின் பல பிரச்சனைகளை சரி செய்ய முடியும்.பல தவறுகள் registry காரணமாக வருகிறது.
Auto/Customs முறையில் update active செய்து கொள்ள வேண்டும்.
வாரம் ஒருமுறை Ccleaner/Glary மூலம் Temp. ,cookies, histories போன்றவற்றை அழிப்பதுடன் defragmentation செய்து கொள்ள வேண்டும்.
அத்துடன் கணினியை Backup செய்தும் கொள்ளலாம்.

sakthyv

No comments:

Post a Comment